விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய …
மேலும் படிக்கஅதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …
மேலும் படிக்கமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …
மேலும் படிக்கசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்
தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்கள். கிண்டி கத்திப்பாராவில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தின் முதல் நுழைவாயிலில் இருந்து அங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது அறைக்கு செல்லலாம். அடுத்து அங்கிருந்து கூட்ட அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மையத்தின் பின்பகுதியில், மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான …
மேலும் படிக்கமுதல்வர் தலைமையில் நாளை தொடங்குகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 25 கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திறகு, ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான …
மேலும் படிக்கஉட்கட்சி தேர்தலில் முறைகேடு: பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்
கர்நாடக அதிமுக உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, வரும் 26ம் தேதிக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் …
மேலும் படிக்கஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …
மேலும் படிக்கபுதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …
மேலும் படிக்ககிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்; மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்திக் …
மேலும் படிக்கதமிழ்நாட்டில் 16 புதிய தாலுகாக்கள் மற்றும் 4 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில் நடப்பு ஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தாலுகாக்கள் மர்றும் 4 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், “நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் பென்னாத்தூரில் புதிய …
மேலும் படிக்க