திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதாலும், முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளதாலும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
பொது தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க குறைந்தது 30 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக வந்தவர்கள் 20 மணி நேரம் வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கின்றனர்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசின சேவையும், ஆர்ஜித சேவை டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ம் தேதி வரை இந்த சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருக்கிறது. ஏராளமான பக்தர்கள் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளிகளில் தங்கியுள்ளனர்.