உலகம்

ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி

ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி ஜப்பானின் ஆன்டேக் எரிமலையில் சனிக்கிழமை ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், சீற்றம் ஏற்பட்டுள்ள சிகரத்துக்கு அருகில் இதயத்துடிப்பு, முச்சு இல்லாத நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சுயநினைவின்றிக் கிடந்தனர் என்று தெரிவித்தார். உயிரிழப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தாதவரை, இறந்தவர்களை இவ்வாறு குறிப்பிடுவது ஜப்பானிய அதிகாரிகளின் வழக்கம் ஆகும். இதுகுறித்த நாகானோ …

மேலும் படிக்க

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …

மேலும் படிக்க

ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்

தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாபை  அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற …

மேலும் படிக்க

போகோ ஹராம் தலைவர் கொல்லப்பட்டார்: நைஜீரிய ராணுவம்

நைஜீரியப் படைகள் நடத்தியத் தாக்குதலில் போகோ ஹராம் தலைவர் என்று கருதக்கூடிய முகமது பஷீர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரிய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக அச்சுறுத்தலாக இருந்த போகோ ஹராம் அமைப்பின் தலைவர், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் கொடுங்கா எனும் இடத்தில், புதன்கிழமை இரவு போகோ ஹராம் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த இயக்கத்தின் தலைவரான முகமது பஷீர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரி …

மேலும் படிக்க

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐ.நா. சபையில் வலியுறுத்துகிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் முதல்முறையாக, வரும் 26ஆம் தேதி …

மேலும் படிக்க

இந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு

Namaste, @MarsOrbiter! Congratulations to @ISRO and India’s first interplanetary mission upon achieving Mars orbit. — Curiosity Rover (@MarsCuriosity) September 24, 2014 Howdy @MarsCuriosity ? Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …

மேலும் படிக்க

உபசரிப்பு அமோகம், முதல்வர் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸுக்கு அர்னால்ட் நன்றிக் கடிதம்

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னை வந்தார் அர்னால்ட். அப்பொழுது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பை நினைவு கூர்ந்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னை வந்தபோது தன்னை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்க மக்கள் அனைவரும் “அம்மா” என்று அழைப்பதில் தான் ஆச்சர்யப்படவில்லை என்றும், நீங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செய்யும் உதவிகள் நெஞ்சை நெகிழச் செய்தது, பெண் காவல் …

மேலும் படிக்க

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் புதிய திட்டம்

அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகினால், கடல் பகுதியில் இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய நேரிட்டாலும், அதற்கு பதிலடி தரும்வகையில் புதிய …

மேலும் படிக்க

ரஷ்யாவில் போர் எதிர்ப்பு பேரணி

கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் சேர்க்க  அங்குள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் கடந்த ஏப்ரல மாதம் முதல்  உக்ரைன் அரசு படையுடன் போரிட்டு வருகிறார்கள். இரண்டு மாகாணங்களை கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர்.  இந்துவரை இங்கு நடந்த தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.இதனால் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.இந்த நிலையில் உக்ரைன் …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் ராஜினாமா

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அலெக்ஷ் சால்மண்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கை தோல்வியடைந்தது. ‘ஒரு தலைவராக எனது காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான பிரசாரம் தொடரும், அந்தக் கனவு மரணித்துவிடாது’ என்று கூறினார் அலெக்ஸ் சால்மண்ட். ‘ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் கோரிய ‘யெஸ்'(ஆம்)– பிரசாரப் போராட்டத்தை இட்டும் எங்களின் கோரிக்கைக்கு வாக்களித்த 1.6 …

மேலும் படிக்க