சென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு!

சென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இவருடன் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான “கிங்மேக்கர்” திரு Ln. B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞர் அணி செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியருமான திரு Ln L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்டம் ( கி) தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு. A. மதன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

விழா ஏற்பாடுகளை திரு J.ஏழுமலை, திரு. J. சீனிவாசன், திரு. K. செந்தில் ஆண்டவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் …