பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்ற கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம் – K.R. நந்தகுமார்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள், தனியார் பள்ளிகள் இந்த ஆகஸ்ட் மாதம் 40 சதவிதம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அடுத்த கட்டமாக பள்ளிகள் திறந்தபின் மீதி கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்ற மாண்புமிகு நீதியரசர் உத்தரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் பள்ளிகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பல்வேறு சுமைகளால் அவதியுறும் எங்களுக்கு நியாயமான தீர்ப்பினுடன் கல்விக் கட்டணக் குழு வாயிலாக இன்னும் சில மாதங்களில் அதற்கான நல்ல தீர்வினை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை…

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் …