தலைவரது கரத்திற்கு பலம் சேர்த்திட….

 

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம் ” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளரும், மாநில தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் முன்னிலையில், மாவட்ட தலைவர் திரு. M. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 13.08.2023, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நமது மாத இதழ் ஆண்டு விழாவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பில் பங்கு பெறுவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

இத்துடன், ஏற்கனவே நம் நிர்வாகிகள், அம்பத்தூர் சோழவரம், 81வது வட்டத்தில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் செய்யக்கூடியதை பற்றி ஆலோசனைகளையும், இனி வரும் நாட்களில் உறுப்பினர்கள் சேர்க்கை என்பது சங்க விதிகளுக்குட் பட்டு செயலாற்றிடுபவர்களை களம் இறக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் திரு. K. சங்கர்,மாவட்ட செயலாளர் திரு. S. விஜயகுமார், துணை செயலாளர் திரு. M. சரவணன், மாவட்ட தகவல் நுட்ப அணி செயலாளர் திரு. K. மாத்தியு , மாவட்ட உறுப்பினர்கள் திரு. B. மணி, திரு. S. வேலாயுதம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …