நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது.

சிங்கள தீவிற்கு ஒரு பாலமாய்… 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது.

காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் கப்பல் புறப்பட்டது.

150 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்ய முடியும், ரூ.7,670 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் நிர்ணயம்.

இதில் மத்தியதுறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி செல்வராஜ், ஆகியோர் பங்கேற்பு.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்பு.

Check Also

வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் …