5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:
*தெலங்கானாவில் 3.17 கோடி,*
*மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி,*
*ராஜஸ்தானில் 5.25 கோடி,*
*சத்தீஸ்கர் 2.03 கோடி,*
*மிசோரம் 8.52 லட்சம்* வாக்காளர்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.