சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.
சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கென தனியாக தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மேல் மாடிக்கும் பரவியது. தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி