வில்வித்தை மற்றும் ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்றது

இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இன்று நடந்த காம்பவுண்டு பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி வலிமையான தென் கொரியாவை 227-225 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியுள்ளது.

இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, முடிவில் 227-225 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது.

ஆசிய வில்வித்தை போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இது தான் முதன் முறை.

ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

squas

தனிநபர் பிரிவில் சவ்ரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல் மூலம் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் கிடைத்தது. 

மலேசியா ஆடவர் ஸ்குவாஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவ்ரவ் கோஷல் தலைமையில் இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

சுமார் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-0 என்று வெற்றி பெற்றது. முதலில் 25 வயது வீரர் ஹரிந்தர்பால் சிங் மலேசிய வீரர் இஸ்கந்தர் மொகமது அஸ்லான் பின் என்ற வீரரை 11-8, 11-6, 8-11, 11-4 என்ற செட்களில் வென்றார்.

சவ்ரவ் கோஷல் முதல் ஆட்டத்தில் 6-11 என்று பின் தங்கி பிறகு மீண்டெழுந்து 11-7, 11-6, 12-14, 11-9 என்று வெற்றி பெற்றதையடுத்து 2-0 என்று வென்று தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *