அமுரா

கருணாநிதிக்கு, ஜெயலலிதா சவால் – நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?

ஆரணியில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காவிரி பிரச்னை குறித்து, வாதம் செய்ய, சட்டசபையில் நேரம் ஒதுக்கலாம். அதில் விவாதித்து, யார் தவறு செய்தார்கள், யார் நியாயமாக நடந்து கொண்டார்கள், யார் நம் உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை, நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் எனக் கூறி இருக்கிறார். அவரது …

மேலும் படிக்க

ராகுல், அன்னா ஹசாரேவைத் தொடர்ந்து மோடியை சந்திக்கிறாரா நடிகர் விஜய்?

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மோடியை நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார்.  இந்த சந்திப்பு கோவையில் வைத்து நடைபெறும் எனத்தெரிகிறது. இது தொடர்பாக @Vijay_cjv ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது. “Indeed …

மேலும் படிக்க

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடிக்கப்பட்டார் – மு.க. ஸ்டாலின்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் பேசிய போது: அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் எங்கும் சென்று பேச முடியவில்லை, ஒட்டு கேட்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக அளித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி …

மேலும் படிக்க

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவு

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதனால் அனைத்து வாகனங்களையும் சோதனையிட ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், மாவட்டம் முழுவதும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. பணம், பொருள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதையடுத்து போலீஸ் வாகனங்களையும் தேர்தல் …

மேலும் படிக்க

7வது ஐபிஎல் கிரிக்கெட் 16ந் தேதி கோலாகல துவக்கம்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 7வது சீசன் கோலாகலமாக 16ந்தேதி துவங்குகிறது.  இந்தியாவில் தேர்தல் நடப்பதால் இரண்டு கட்டமாக போட்டிகள் நடக்கின்றன. அதாவது முதல் கட்ட போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் நடக்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பி யன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர் கொள்கிறது. முதல் 20 ஆட்டங்கள் இந்த நாடுகளில் நடக்கிறது. 2வது கட்டமாக 21வது ஆட்டத்தில் இருந்து இறுதி ஆட்டம் வரை …

மேலும் படிக்க

துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

15-04-2014 அன்று துணை வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் 19ம் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

தவறாமல் வாக்களியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை அதனால் தவறாமல் வாக்களியுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமான பல கடமைகளில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. …

மேலும் படிக்க

ரஜினியை மட்டும் சந்தித்ததால் விஜயகாந்த் கோபம்? சமாதானம் செய்தாரா? நரேந்திர மோடி

ரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வலுசேர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், மோடியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் என்றார். நரேந்திர மோடி வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்றும் கூறினார். இதற்கிடையே ரஜினியை சந்தித்த நரேந்திர மோடி, தமிழக பாஜ கூட்டணியில் அதிக வாக்கு …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் முதல் தேடலில் எந்த தகவலும் இல்லை

இந்துமகா சமுத்திரத்தில் தனது முதல் தேடல் நடவடிக்கையின் போது, சிறிய ஆளில்லா நீர்மூழ்கியால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க கடற்படையின் காப்டன் ஒருவர்  கூறியுள்ளார். தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான் அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் …

மேலும் படிக்க

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது. இது சம்பந்தமாக தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, …

மேலும் படிக்க