அமுரா

தேர்தலை பொதுமக்கள் நேரடியாக இணையதளம் மூலம் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை   உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684  சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான …

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை …

மேலும் படிக்க

குஜராத்தில் பதற்றம்-முஸ்லீம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை காலி செய்ய விஹெஸ்பி தலைவர் தொகாடியா 48 மணி நேரம் கெடு:

குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் …

மேலும் படிக்க

தமிழக காங்கிரஸ் களமிறக்கிய நட்சத்திரம் நடிகை மும்தாஜ்!

தமிழக காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்காக தமது பிரசார பீரங்கியாக நடிகை மும்தாஜை களம் இறக்கியுள்ளது, அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மும்தாஜ் பேசுகையில், “நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைப்பதற்காக அங்கிருந்து பிளேன் பிடித்து வந்துள்ளார். அதனால்தான் ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்” என்றார். காங்கிரஸ் …

மேலும் படிக்க

பெங்களூருக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கம் – லேண்டிங் கியர் பிரச்சனை

மலேசியன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில், எமர்ஜென்சி லேன்டிங் செய்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் வலது லேன்டிங் கியர் இயங்காத நிலையில், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து இறங்கியுள்ளது. இன்று அதிகாலை எமர்ஜென்சி லேன்டிங் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் MH192 விமானம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.09-க்கு புறப்பட்டது. பெங்களூரு செல்லவேண்டிய …

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராகுல் உறுதி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் அத்தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:– 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வன்முறையும், மத துவேசமும் கிடையாது. இந்திய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே சிறப்பான திட்டங்களை தந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் …

மேலும் படிக்க

மும்பையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம்

மும்பையில் கட்டி முடிக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சான்டாக்ரூஸ் சேம்பர் லிங்க் ரோடு(SCLR) என்ற இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனை இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்கின்றனர். …

மேலும் படிக்க