அமுரா

ராம நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்பு ரத்து

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராம நாராயணன் உடல் மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று …

மேலும் படிக்க

இந்தி திணிப்பா? மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்

தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை – சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி …

மேலும் படிக்க

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான படு பயங்கர கலவரம் வெறியாட்டம்

இலங்கையில் நடந்த கொடூரத்தை விவரிக்கும் செய்திகளை பல இணையதளங்கள் வெளியிட்டுள்ளன அதில் உங்கள் பார்வைக்கு: அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு  சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் புத்த அமைப்பு வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிவாசல்களில்   புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இரத்த வெறியாட்டம் ஆடியுள்ளனர். அளுத்கம நகரில் நேற்று (15-6-2014) மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த …

மேலும் படிக்க

சென்னையில் மாற்று இதயத்துடன் உயிரைக் காக்க அதிவேகப் பயணம் – பரப்பான அந்த 13 நிமிடங்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் 6 உடல் உறுப்புகள், சென்னையில் இதயக்கோளாறால் சிகிச்சை பெற்றுவரும் மும்பை இளம்பெண் உள்பட பல்வேறு நபர்களுக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை மாலை அகற்றப்பட்டது. இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு, அடையாறு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு பொருத்து வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் ஒத்துழைப்புடன் 11 …

மேலும் படிக்க

1500 ரூபாய்க்கு பயர் ஃபாக்ஸ்(FireFox) ஸ்மார்ட் போன்

ஓபன் சோர்ஸ் பிரவுசர் (Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் வெறும் 25 டாலர் (1500 ரூபாய்) மதிப்பிலான பயர் ஃபாக்ஸ் ஓ.எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் இந்த செல்போனை …

மேலும் படிக்க

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல், பாஜகவில் சேரப்போவதாக தகவல்

திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும். அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ, அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் …

மேலும் படிக்க

சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் – டில்லி மெட்ரோ போல, இங்கும் சீசன் டிக்கெட் கிடையாது!

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும் நிலயில் உள்ளன. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 10 …

மேலும் படிக்க