அமுரா

தனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்!

கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, டிசம்பர் 23-க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே! அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே! …

மேலும் படிக்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா தேவையா? நடிகர் கே. ராஜன் அதிரடி!

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவது சம்பந்தமாக நடிகர் கே. ராஜன் அதிரடி பேட்டி.. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு ரூபாய் இரண்டு கோடியும், அவருடன் வரும் இசைக் கலைஞர்களுக்கு ரூபாய் ஒன்றரைக் கோடியும் தரப்போவதாக கூறுகிறார்கள், நான் கேட்பது இதுதான், பாராட்டு விழா நடத்தும் போது இவருக்கு ஏன் கூலி தர வேண்டும்? நியாயமா பார்த்தா கூட வரும் இசைக் கலைஞர்கள்களுக்கு தருவது தப்பில்லை. …

மேலும் படிக்க

தெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…

உங்கள் பார்வைக்கு… இன்று காலை குடும்பத்துடன் திருவள்ளூரிலிருந்து சென்னை திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு வாங்கும் போது காலை 9-58மணி. ரயில் புறப்படும் நேரம் காலை 10 மணி. நாம் சீட்டினை பெற்றுக் கொண்டு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட அடுத்த ரயிலுக்கு காத்திருந்த போது அடுத்த ரயில் அரக்கோணத்திலிருந்து வருகின்ற போதே மக்கள் நெருக்கத்தில் நிரம்பி வழிந்ததால் அடுத்த ரயிலில் செல்ல முடிவு செய்தோம். கிட்டத்தட்ட 11-15 …

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் சுனாமி: 373 பேர் பலி?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா, ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை …

மேலும் படிக்க

இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மாறாக ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். குஜராத்தின் ராஜ்கோட் அருகே ஜஸ்டான் மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் கடந்த வருடம் …

மேலும் படிக்க

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் …

மேலும் படிக்க

காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!

குற்றப் பரம்பரையாக சித்தரிக்கப்பட்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கரை நீக்கப்படுகிறது இறைவனின் உதவியால்… தீவிரவாதத்தின் அடையாளமாய் காட்டப்பட்ட தாடியும் குல்லாவும், இன்று அன்பு மற்றும் சேவையின் குறியீடுகளாய் மாறிக்கொண்டிருக்கிறது கால ஓட்டத்தில்! சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், ‘மறக்கவே நினைக்கிறேன்’ எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்; “கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் …

மேலும் படிக்க

கைகொடுக்குமா விஸ்வரூபம் 2′

விஸ்வரூபம் 2′ முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல… முன்கதையும் கூட என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழில் ஸ்ருதி ஹாசனும், இந்தியில் ஆமிர் கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ட்ரெய்லரை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். ஆனாலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார் கமல்ஹாசன். அதில் …

மேலும் படிக்க