அமுரா

சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி, தமாகா சார்பில் இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதுடன், காலாவதியான சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் பூட்டு போடும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் …

மேலும் படிக்க

சிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர்

சிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிக்க பொன்ராம் இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க

30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பு வாபஸ்

நாராயண சாமி உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார், உள்ளிட்டோரும் அடங்குவர். அந்த விஜபிகளுக்கு முன்பிருந்த அச்சுறுத்தல் தற்போதும் நீடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …

மேலும் படிக்க

பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை வெளிப்படையாகக் காட்டியது. பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில் சீனா, தன்னுடைய ராணுவ ஆற்றலை உலகுக்கு உணர்த்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சியை  நடத்தியது. …

மேலும் படிக்க

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …

மேலும் படிக்க

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …

மேலும் படிக்க

பாயும் புலி படம் நாளை வெளியாகிறது

பாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரும்அறிவித்துள்ளார்கள். விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் …

மேலும் படிக்க

அரிசி குடோனாக மாறும் ராஜபக்சே கட்டிய விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரில் கட்டிய விமான நிலையம், தற்போதைய அரசால் அரிசி குடோனாக மாற்றப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தல என்ற இடத்தில் ராஜபக்சே விமான நிலையத்தைக் கட்டி திறந்தும் வைத்தார். அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தற்போது ஒரே ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தை மூடிவிட்டு அரிசி குடோனாக மாற்றும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று …

மேலும் படிக்க