அமுரா

நடிகர் விஜய் வழங்கிய ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சென்னை சைதாப்பேட்டையில் டீ கடையில் வேலைபார்க்கும் எம்.ஷாகுல்ஹமீதுவின் மகள் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் 1,109 மதிப்பெண்கள் பெற்று, வறுமையின் காரணமாக என்ஜினீயரிங் படிப்பில் சேரமுடியாமல் கஷ்டப்பட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய், பாத்திமா என்ஜினீயரிங் படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார். இதற்கான கல்வி கட்டணத்தை மாணவியை நேரில் அழைத்து விஜய் வழங்கினார்

மேலும் படிக்க

​மத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை  பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க …

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல் மேலும் விலை குறைய வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 நாட்களில் 5.19 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை சரிந்திருப்பதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விலை குறைப்பு அறிவிப்பை …

மேலும் படிக்க

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம்

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நம்பகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணைக்க ஒத்துழைப்பு தரும் தனிநபர்களையும் அந்நாட்டு …

மேலும் படிக்க

விஏஓ தேர்வு முடிவுகள் இன்னும் 3 வாரங்களில் வெளியாகும்

3 அல்லது 4 வாரங்களில் விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்ரமணியம், குரூப் 2 தேர்வு மற்ற தேர்வுகளையும் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 6 லட்சம்  விண்ணப்பித்துள்ளனர் என்று பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

கருப்பு பணம் விவகாரம்: 289 கணக்குகளில் பணம் காலி…

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில், உள்ள 289 கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அந்த கணக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு …

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மேலும் சில ஆண்டுகள் இலவசம்

இந்தியாவில் கிட்டத்தட்ட  7 கோடி பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை ஒரு வருடத்திற்கு மட்டுமே அதன் பயன்பாட்டை இலவசமாக வழங்கிவந்தது .அதன் பின் ஒரு பயனாளருக்கு 1 அமெரிக்க டாலர் பயன்பாட்டு கட்டணமாக  வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் அந்நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி துறை  துணைத்தலைவர் நீராஜ்  அரோர  இந்தியாவில் என்னும் சில ஆண்டுகள் வாட்ஸ்அப் பயன்பாட்டை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், இந்தியாவில் கிரெட்டி …

மேலும் படிக்க

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் – ன் 14 வது மாநில மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் – ன் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ( 08-11-2014) அன்று நடைபெறுகிறது.  இந்த மாநாடு மகத்தான வெற்றி பெற ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துகிறோம்

மேலும் படிக்க

காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு,  டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர …

மேலும் படிக்க

ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. …

மேலும் படிக்க