அமுரா

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்து திமுக சார்பில் …

மேலும் படிக்க

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

கொல்கத்தாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பு கோலால் சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்தது. 8 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் …

மேலும் படிக்க

டெண்டுல்கர் புகார், கிரேக் சேப்பல் மறுப்பு

ராகுல் திராவிடுக்கு பதிலாகத் தன்னை கேப்டனாக இருக்குமாறு 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டார் என்று டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார். “பிளேயிங் இட் மை வே’ என்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் குறித்து அதில் …

மேலும் படிக்க

டில்லி சட்டசபை கலைப்பு : குடியரசுத் தலைவர் உத்தரவு

டில்லி சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் டில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், டில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், டில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து …

மேலும் படிக்க

சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தேவை : நிதின் கட்கரி வேண்டுகொள்

சென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டப் பணிகள் தொடர்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், இப்பணியை முடிக்க தமிழக முதல்வர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக சென்னைத் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- சென்னைத் …

மேலும் படிக்க

ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: உச்சநீதிமன்றம் கெடு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் …

மேலும் படிக்க

முல்லைப் பெரியாறு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 136 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையில், மூவர் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை காலை ஆய்வு நடத்தினர். மாலையில், மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், “தமிழக பொதுப் பணித் துறையின் செயல்பாடுகள் சரியில்லை. கதவணைகளில் (ஷட்டர்) பிரச்னை …

மேலும் படிக்க

டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரை!

டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார். டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் …

மேலும் படிக்க

விஸ்வரூபம் 2 தாமதம் ஏன் – கமல் விளக்கம்

‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாவதில் தாமதம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதனைத் தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்தது. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’, ஜூது ஜோசப் …

மேலும் படிக்க

சகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்? கருணாநிதி கேள்வி

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன்? என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த …

மேலும் படிக்க