அமுரா

“ஜன் தன்” வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் இன்று தொடக்கம்

ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் “பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டம்’ நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படுகிறது. இதனையொட்டி, டில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் சுமார் ஒரு கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நாளில் பிரதமர் ஆற்றும் உரையை 76 நகரங்களில் காணொலி …

மேலும் படிக்க

சன் குழுமம் கேபிள் டி.வி நடத்த அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal …

மேலும் படிக்க

மலிவு விலை விமான டிக்கெட்: செயலிழந்த ஏர் இந்தியா வெப்சைட்

ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான ரூ.100 டிக்கெட்டை பெற மக்கள் முயன்றதால் அதன் இணையதளம் www.airindia.com செயல் இழந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக …

மேலும் படிக்க

போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள். இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து நாடு களத்தில் இறங்கியது. இந்நிலையில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை …

மேலும் படிக்க

அத்வானி, ஜோஷியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறதா?

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின், உயர்மட்ட அதிகாரக் குழுவிலிருந்து மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய குழு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்கள் என்று கருதப்படும் அத்வானி, ஜோஷி ஆகியோர் இனி கட்சியின் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்று கட்சியின் அறிவிப்பு கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட அதிகாரக் குழுவில் அத்வானி, …

மேலும் படிக்க

உலகின் முதல் தடவை முழுமையான உடல் உறுப்பு வளர்த்து ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தகைய முயற்சி வெற்றி பெறுவது உலக அளவில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் தைமஸ் என்று அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் …

மேலும் படிக்க

பில் கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்?

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அவ­ரது பெண் உத­வி­யாளர் மொனிக்கா லிவின்ஸ்­கிக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பாலியல் ரீதி­யான தொலை­பேசி உரை­யா­டல்க­ளை ரஷ்­யாவும், பிரிட்டனும் ஒலிப்­ப­திவு செய்­த­தா­கவும் அந்த ஒலிப்­ப­திவு நாடாவை இஸ்­ரே­ல் பிர­தமர் அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைப்­ப­தற்­கான கரு­வி­யாக பயன்­ப­டுத்த முயற்­சித்­த­தாகவும் புதிய புத்­தகம் ஒன்று உரிமை கோரி­யுள்­ளது. ‘வீக்லி ஸ்டான்டர்ட்’ பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் டானியல் ஹால்­பரால் எழு­தப்­பட்ட ‘கிளின்டன், இன்க்’ என்ற நூலே இவ்­வாறு உரி­மை­கோ­ரி­யுள்­ளது. மொனிக்கா …

மேலும் படிக்க

எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவை! உலக சுகா­தார அமைப்பு தகவல்

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் பரவி வரும் எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவைப்­ப­டு­மென உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது. எதிர்­பார்த்­ததை விட வேக­மாக வைரஸ் பரவி வரு­வ­தா­கவும் உலக சுகா­தார அமைப்பின் துணை இயக்­குநர் கெய்ஜி புகுடா எச்­ச­ரித்­துள்ளார். இத­னி­டையே சிய­ரோ­லி­யோனில், எபோலா வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மருத்­து­வ­ ம­னை க்கு கொண்டு செல்­லாமல் பாது­காப்­ப­வர்­க­ளுக்கு இரண்டு ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­மென அந்­நாட்டு அரசு அறி­வித்­துள்­ளது. கினி, …

மேலும் படிக்க

‘காந்தி’ படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோ ஞாயிறன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மாடிப்படியில் தவறி விழுந்ததை அடுத்து, வீல் சேரில் இருந்தே இயங்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார். சுமார் 60 வருடங்களாக திரைத்துறையில் நடிகர், இயக்குநர் என்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பைச் செய்தவர் …

மேலும் படிக்க