அமுரா

சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையை அந்நாடு நிராகரித்தது. முன்னதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கொழும்புவில் இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். அந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவின் தரமான மீன்கள், இறால்கள் முழுவதும் பிடிக்கப்பட்டுவிட்டன. ஏற்றுமதித் …

மேலும் படிக்க

நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை,  இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் …

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோவிலில்இன்று தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சுவாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த …

மேலும் படிக்க

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி திருக்கோயிலைச் சுற்றி வலம்வந்து கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜை நடைபெற்றது. கொடி மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அங்குசத் தேவருக்கு சிறப்பு கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. …

மேலும் படிக்க

பத்து மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பொதுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை …

மேலும் படிக்க

தகராறு செய்த 5 பேரை அடித்து உதைத்து தந்தையைக் காத்த உ.பி இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனது தந்தையைத் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை அடித்துத் துவைத்த இளம்பெண். நடுத்தர வயதுடைய  ஒருவர் பைக்கில் தனது மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதை அடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அந்த மனிதரை கண்மூடித் தனமாகத் தாக்கத் தொடங்கியது. உதவிக்கு யாரும் வராத …

மேலும் படிக்க

செக் மோசடி வழக்கு: டைரக்டர் சரண் கைது

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்று காலை நெல்லை அருகே பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். அவர்கள் ரூ.50 லட்சம் செக் …

மேலும் படிக்க