செய்திகள்

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து …

மேலும் படிக்க

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது நாட்டில் இதுவே …

மேலும் படிக்க

ஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

ஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை உடன் இருந்தவர்கள் தடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். Chennai: Self immolation attempt outside Jayalalithaa’s Residence #Jayaverdict pic.twitter.com/wkwuwjx6ZS — ANI (@ANI_news) September 27, 2014

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் பதட்டம் – அதிமுகவினர் கொந்தளிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். Chennai: AIADMK supporters protest outside Subramanian Swamy’s Residence #Jayaverdict pic.twitter.com/BtswiWQJrW — ANI (@ANI_news) September 27, 2014 பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக …

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொந்தளிப்பு: கருணாநிதி வீட்டின் மீது கல்வீச்சு – ANI News

கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசியதாக  ANI நியுஸ் தெரிவிக்கின்றது. மேலும் ஏராளமான அதிமுகவினர் கருணாநிதியின் வீட்டின் அருகே குவிந்துள்ளனர். அதிரப்படை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Chennai: #Jayaverdict Stone pelting at Karunanidhi’s residence,Reinforcement arrives pic.twitter.com/u1bavxcVJt — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict AIADMK Supporters gather outside Karunanidhi’s residence pic.twitter.com/lGpZqln1ZR — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict …

மேலும் படிக்க

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி.

18 வருடமாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி பரபரப்பு தீர்ப்பு , வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு. ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. இதைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். விரிவான தண்டனை விவரத்தை 3 …

மேலும் படிக்க

குஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில், கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாட்டுக்கு வெளியே நிகழும் சர்வதேச சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க குடிமக்கள் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க நீதித்துறை …

மேலும் படிக்க

மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்ததால் சவாண் பதவி விலகினார். “மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிருத்விராஜ் சவாண், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்’ என்று உயரதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, பிருத்விராஜ் சவாணையே இடைக்கால முதல்வராக நீடிக்கச் …

மேலும் படிக்க

மேக் இன் இந்தியா: இனி சிங்க முகம்!

இறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை இன்று நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிங்க முகத்தை இனி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒவ்வொறு …

மேலும் படிக்க

மங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. …

மேலும் படிக்க