முக்கியசெய்திகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை வேறு திசைகளில் தேடுதல் – புதிய ஆதாரம்

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து 1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன. இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது. ராடார் பதிவுகள், அந்த விமானம், மேலும் மிக விரைவாக பறந்து கொண்டிருந்தது, எரிபொருளை அதிகமாக செலவழித்தது, என்று காட்டுவதை அடுத்து இந்த தேடல் வேட்டையில் மாற்றம் வருகிறது. வெள்ளிக்கிழமை காலை …

மேலும் படிக்க

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை. மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித …

மேலும் படிக்க

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் லில் விளையாட தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின. இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் கவாஸ்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரை …

மேலும் படிக்க

ஹேர் ஸ்டைலை பார்த்தா தெரியல டீசண்ட்டா ஆளுன்னு – சினிமா ஸ்டைல் திருடன்

சென்னையில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில்அதனை விழுங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் முயற்சியால் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. சென்னை புனித தாமஸ் மவுண்டை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் – கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி சிங்

தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில்,   சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக …

மேலும் படிக்க

இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக  அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்  ஜநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் …

மேலும் படிக்க

மத்திய மந்திரியை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளர் மீது புகார்

தேர்தல் வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே  நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் …

மேலும் படிக்க

தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட்  படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக …

மேலும் படிக்க