முக்கியசெய்திகள்

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது. பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு மானியம் ரத்தா? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும், …

மேலும் படிக்க

புதிய கட்சியின் கொடி நாளை அறிமுகம்: ஜி.கே.வாசன்

புதிய கட்சியின் கொடி சென்னையில் நாளை வெளியிடப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே கட்சிக்கு வைக்க வேண்டும் என பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க

சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

மேலும் படிக்க

சார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …

மேலும் படிக்க

சகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரிக்கலாம் : உயர் நீதிமன்றம்

மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி மட்டும் விசாரிக்கலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றும், விவகாரம் பெரிய அளவிலானது என்பதால், விசாரணையை படிப்படியாக நடத்தலாம் என்றும் கூறினார். கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தவுக்கு …

மேலும் படிக்க

முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா காலமானார்.

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா திங்கட்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 77. சிறிது காலம் உடல்நலமின்றி இருந்த அவர், மும்பையில் தனது இல்லத்தில் காலமானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம்தான் வீடு திரும்பியிருந்தார். நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேவ்ரா, 2006ல் பெட்ரோலியத் துறை அமைச்சரானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா இவருடைய …

மேலும் படிக்க

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவியின் இணை ஆசிரியர் திரு. லி. பரமேஸ்வரன் அவர்களின் தாயார் ஆர். ராஜேஸ்வரி அவர்கள் 21-11-2014 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணியளவில் இயற்கை எய்தினார். அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அண்ணாரது இறுதிச் சடங்குகள் 22-11-2014, சனிக்கிழமை மாலை 2 மணியளவில் நெ. 148/127, ஆடம் தெரு, இராயபுரம், சென்னை – 13 என்ற …

மேலும் படிக்க

2ஜி விசாரணை, விலகியிருக்க சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவின் விவரம்: “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்பின் …

மேலும் படிக்க

சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமின் மனு தள்ளுபடி

வட இந்திய மாநிலமான ஹரியானாவில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் இன்று வியாழனன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஒரு கொலை வழக்கில் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். ஹரியாணாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான …

மேலும் படிக்க