முக்கியசெய்திகள்

இந்து கடவுளை அவமதித்ததாக, டோனி க்கு கைது வாரண்டு ஆந்திர கோர்ட்டு பிறப்பித்தது

இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் டோனி க்கு ஆந்திர கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. பிஸினர் டுடே ஏப். 2013 இதழின் அட்டையில் வெளியான புகைப்படத்தை வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்துக் கடவுள் விஷ்ணு போல் வரையப்பட்டிருந்த படத்தில் தோனி படத்துடன் ‘காட் ஆஃப் பிக் டீல்” என்ற தலைப்பிட்டு வெளியானது. அதில் ஒரு கையில் ஒரு நிறுவனத்தில் ஷூவை தோனி …

மேலும் படிக்க

80 கி மீ தூரம் வரை, புறநகர் ரயில் இரண்டாம் வகுப்பு கட்டண உயர்வு வாபஸ்

80 கி.மீ., தொலைவு வரையிலான புறநகர் ரயில் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, வாபஸ் பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இன்று ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 80 கி.மீ. தொலைவு வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர், புறநகர் அல்லாத அனைத்து ரயில்களுக்கும் 14.2 சதவீத கட்டண உயர்வை ரயில்வே அறிவித்திருந்தது. …

மேலும் படிக்க

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் டின் நிறுவனர், மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். 2ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பில், நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத் திறப்பு, பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு பத்திரம் ஆகிய நிகழ்ச்சி, 22.6.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை கிண்டி, எம்.ஆர்.சி. ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழநாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா, மறைந்த தோழர்  டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்தார். …

மேலும் படிக்க

பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிறப்பு பேருந்துகள்

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைகழகம் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து …

மேலும் படிக்க

நாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.

மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி …

மேலும் படிக்க

‘கத்தி’ டீசர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்தின் காப்பியா?

விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் விளம்பர பேனர் மற்றும் டீசர், விஜய் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இவை உலகின் பிரபல ஆங்கில பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ்ன் விளம்பரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த செய்திதாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி வெளியாகும் செய்திதாள்களின் தொகுப்பில் விஜய் உருவம் வருவது போன்று விளம்பர பதாகை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பதாகை, தி …

மேலும் படிக்க

இந்தி திணிப்பா? மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்

தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை – சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி …

மேலும் படிக்க

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான படு பயங்கர கலவரம் வெறியாட்டம்

இலங்கையில் நடந்த கொடூரத்தை விவரிக்கும் செய்திகளை பல இணையதளங்கள் வெளியிட்டுள்ளன அதில் உங்கள் பார்வைக்கு: அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு  சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் புத்த அமைப்பு வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிவாசல்களில்   புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இரத்த வெறியாட்டம் ஆடியுள்ளனர். அளுத்கம நகரில் நேற்று (15-6-2014) மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த …

மேலும் படிக்க