முக்கியசெய்திகள்

மேஜர் முகுந்த் உடல் சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் 42 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர். இதில், …

மேலும் படிக்க

பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த நிலங்கள் பாஜக வெளியிட்ட வீடியோ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக எட்டு நிமிட வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிடடார். இந்த வீடியோவுக்கு சோனியா காந்தி குடும்பம் பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேரா பற்றி பிரியங்கா விளக்கட்டும் இதுகுறித்து கூறிய பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, …

மேலும் படிக்க

கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் பிரபலமான நூறு பேர், டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்

கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் டைம் நூறு பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்காவது இந்தியர் ஆவார். இவரை சுகாதாரப் போராளி என வர்ணித்துள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, மலிவு விலை நாப்கின்கள். தென்னிந்தியாவின் சிறு நகரத்தைச் (கோயம்புத்தூர்) சேர்ந்த இவர், தன் மனைவி பழைய துணிகளைச் சேமிப்பதைப் பார்த்து எதற்காக எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி “என் மாதவிடாய்க் காலத்தில் இவை உதவும்” எனச் …

மேலும் படிக்க

அமாலா பால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் – டைரக்டர் விஜய்

டைரக்டர் விஜய் – அமலா பால் திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாகவும், திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின. மேலும் விஜய்யை அமலா பால் மதம் மாறச் சொன்னதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. [pullquote]அவர் உண்மையிலயே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன். -டைரக்டர் விஜய்[/pullquote] இந்நிலையில் முதன் முறையாக அமலா பாலுடனான காதல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு …

மேலும் படிக்க

டைட்டானிக் கடைசிக் கடிதம் ஏலத்துக்கு வருகிறது

டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்டிருக்கக் கூடிய கடைசி கடிதம் பிரிட்டனில் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்களுக்கும் அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தக் கப்பல் நீரில் மூழ்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக இந்தக் கடிதத்தை, அதில் பயணித்த எஸ்தர் ஹார்ட் என்னும் பெண், லண்டனில் இருந்த தனது தாயாருக்கு எழுதியுள்ளார். அந்த விபத்தில் உயிரிழந்த எஸ்தரின் கணவரின் கோர்ட் பாக்கட்டில் அந்தக் கடிதம் கடைசியாக …

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ஒருவர் 50 ஆண்டுகளில் முதல் தடவையாக மலேசியா பயணம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா சென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் தடவை. பசிபிக் பிராந்திய வணிக ஒப்பந்தம் ஒன்றில் மலேசிய அரசாங்கத்தை கையொப்பம் இடுமாறு ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எல்லாக் காலங்களிலும் நல்லவிதமாக இருந்ததில்லை. அமெரிக்க கொள்கைகளை மலேசியப் பிரதமர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க

சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்தார். அதற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் அவர்களை கட்டுப்படுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்’ என்று அவர் பதிலளித்தார். மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர …

மேலும் படிக்க

செயலிழந்த தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்த தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் (http://elections.tn.gov.in/)நேற்று முதல்செயலிழந்தது. இதுபற்றி கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இது ஹார்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுதான். அந்த தளத்தில் இருந்த தகவல்களை வேறொரு தளத்தில் பாதுகாத்து வைத்துள்ளோம். இதனால், எவ்வித தகவல் இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். இன்று இணையதளம் …

மேலும் படிக்க