சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று மயான கொள்ளை விழாவினை முடித்து, அம்பாள் வீதிவுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 8 மணியளவில் பல்வேறு முருகபெருமான் அலங்கார நாயகனாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிவுலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்வகையில், 12.03.2022, சனிக்கிழமை வள்ளி முருகன் திருக்கல்யாணம் விஸ்வகர்ம மக்களால் வெகு சிறப்பாக நடந்தேறியது. …
மேலும் படிக்கதர்காவில் கார்த்திகை தீபம்!….
மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டியவாறு தர்கா ஒன்று உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்த தர்காவில் கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரம் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். தர்கா …
மேலும் படிக்கசென்னை இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்…
சென்னை இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அமைந்துள்ள, காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஆலய குருக்கள் திரு. ராஜசேகர், திரு. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் நடைபெறுகின்ற அன்னாபிஷேகத்தை கண்டுகளித்து அந்த உணவினை பக்தியுடன் உண்போருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம். …
மேலும் படிக்கபழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொன்டாடப்பட்டது. காளியம்மன் என்றாலே உக்கிரமான தெய்வம் என சொல்வதுண்டு. ஆனால், இங்கே வீற்றிருக்கும் இந்த அம்மனை உக்கிரமாக பார்த்தால் உக்கிரமானவளாகவும், சாந்தமாக பார்த்தால் சாந்த சொரூபியாகவும் காட்சிதருவது சிறப்பம்சமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில் 8 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 07.10.2021 வியாழக்கிழமை அன்று …
மேலும் படிக்கபரதநாட்டிய அரங்கேற்றம்…
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் பணிபுரியும் திரு. P.ஜானகிராமன் அவர்களின் புதல்வி P.J. நிவேதா மற்றும் திரு.V. நம்பிராஜன் அவர்களின் புதல்வி V.N.ஜேஸ்வினி ஆகியோரது நடன அரங்கேற்றம், சென்னை, ராணி சீதை ஹாலில், 12.09.2021, ஞாயிறு அன்று முதன்மை சிறப்பு விருந்தினர் “கலைமாமணி” திரு. “குத்தாலம்” M.செல்வம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. R.S. பாரத நாட்டியாலயா மாணவிகளான இருவரும், இந்த நிறுவனத்தின் தலைவர் திருமதி பார்வதி மோகன் அவர்களிடம் நடனம் …
மேலும் படிக்ககல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஆரம்பம்…
11-03-2021 மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, இராயபுரம், கல்மண்டபம், ஆதம் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் திருக்கோயிலின் பிரம்மோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி இரவு முழுவதும் நான்கு கால பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.12.03.2021 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில், மயான கொள்ளை நடைபெற்றது. இராயபுரம் மேம்பாலம் அருகில் நடைபெற்ற மயான கொள்ளையினை முடித்த அம்மன், இராயபுரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆனந்த காட்சியினை தந்து அருள் பாலித்த வண்ணம் …
மேலும் படிக்ககாளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 24.02.2021 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 26.02.2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நிகழ்வு ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது. முடிவில் அம்பாளும், சிவனும் தம்பதிசமேயதராய் மணக்கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். வருகைத் தந்த பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தினை …
மேலும் படிக்கசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..
சென்னை, பிப்ரவரி – 24,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.45 மணியளவில் வெகு விமரிசையாக பக்தர்களின் கரகோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்ட பின், மூலவர் அம்பாள் அலங்கார ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள். இந் நிகழ்வில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் திரு கரு. நாகராஜன், போலீஸ் …
மேலும் படிக்கஇராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத்திருவிழா.
இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 27.01.2021 புதன்கிழமை இரவு 10 மணியளவில், மேளதாள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பால்குடங்களின் அணிவகுப்பில் உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தனர். தொடர்ந்து, மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 28.01.2021 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு தீப ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து …
மேலும் படிக்கஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…
சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …
மேலும் படிக்க