ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் வீர தீர விளையாட்டு சாகச நிகழ்ச்சிகள் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை யில் உள்ள வைத்தி திருமண ஹாலில் கடந்த 22/06/2013 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில் திரு. என். பாஸ்கரன் MA., BL., அட்வகேட், CBI, பிரசிடெண்ட், ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளி மற்றும் திரு கே. ஜானகிராமன் Bcom., அசிஸ்டெண்ட் பிரசிடெண்ட் இவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினர்களாக மூத்த வக்கீல் திரு. A. தியாகராஜன் .ML., சமூக சேவகர், திரு. P. வைத்தியலிங்கம் மற்றும்
தென் இந்திய மீனவர்கள் சங்கத்தின் செக்ரட்டெரி திரு. K. சுந்தரமூர்த்தி, திரு. P.F.C. அண்டனி ராஜ், துணைத் தலைவர், சென்னை மாவட்ட Wushu அசோஷியேஷன் ஆகியோர் கலந்து கொணடனர்.
இவ்விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும் குங்ஃபூ மாணவர்களின் வீர சாகசங்கள் அனைவரையும் மெய் சிலிக்கச் செய்தது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி