மக்களின் ஆட்சி என்பது இதுதானோ!

கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டி பகுதியை சார்ந்த ஒரு பெண்மணி தங்களுக்கு ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்றும் அரசின் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவியது.

அந்த வீடியோவை பார்த்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் அனுப்பிய பதிலில், உடனடியாக எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைத்தளம் மூலமாக அப்பெண்ணிற்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் நேரடியாக பதில் அளித்தது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவியதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அந்த பெண்மணி இன்று (04/06/2021) அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அவரின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை அறிந்து கொண்ட அமைச்சர் அலுவலகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மேலும் என்ன உதவியாக இருந்தாலும் உடனடியாக தங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரின் துரித நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் அமைச்சர் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Check Also

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை …