உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனது தந்தையைத் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை அடித்துத் துவைத்த இளம்பெண்.
நடுத்தர வயதுடைய ஒருவர் பைக்கில் தனது மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதை அடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அந்த மனிதரை கண்மூடித் தனமாகத் தாக்கத் தொடங்கியது. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் களத்தில் இறங்கினார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார்.
ஃபேஸ்புக்கில் இப்போது அந்தப் பெண்ணின் வீரம் குறித்து செய்திகள் பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் அவரது துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.