சென்னை இராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியார் லெதர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியில் இன்று மதியம் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இங்கு பலதரப்பட்ட தோலினால் செய்யப்படும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது. விபத்தின் மதிப்பு இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரமாக எரியும் தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக …
மேலும் படிக்கதூய்மை இந்தியாவின் அவலம்…
சென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி வளாகம் இன்றோ குப்பை வளாகமாக துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் தரும் வளாகமாக மாறி வருகிறது. இதனை எந்த வகையில் அபகரிக்கலாம் என்று மாநகராட்சியில் சதி வேலைகளை சிலர் நடத்தி வருவதால், இந்த வளாகம் மக்கள் நலன் பயன்பாட்டிற்கு தகுந்த இடமாக இருக்குமா என சந்தேகம் என பகுதி …
மேலும் படிக்கலயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் தேர்வு…
2020-2021 ஆம் ஆண்டிற்கான லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை கோயம்பேட்டில் சிம்சன் ஹோட்டலில் அரசு வழிக்காட்டுதலின்படி, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்த நிலையில் நடைபெற்றது. இந் நிகழ்வில், திரு. PMJF Ln Dr N.R. தனபாலன் ( Past Dist.Governor) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். திரு. MJF Ln R. சம்பத் (International Director) அவர்கள் …
மேலும் படிக்கராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு…
ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர். இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் பரபரப்பு, நடு ரோட்டில் விரிசல்…
சென்னை இராயபுரம், ஜி.எம். பேட்டை ரோடு வடக்கு பகுதியில் நடு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி. இது பற்றி மக்கள் கூறுகையில், இந்த விரிசல் மட்டுமல்லாமல் தெருவின் ஒரு பகுதி பூமிக்குள் இறங்குவதாகவும் தெரிவித்தனர்.இதே தெருவில் தான் இந்தியன் ஆயில் டேங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கசென்னை இராயபுரம் ஸ்டான்லி நகரில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் ஆய்வு…
சென்னை இராயபுரம் 53 வது வட்டம் ஸ்டான்லி நகர் வரை உள்ள 22 தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார் ரூ. 25 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருகையில் ஸ்டான்லி நகரின் கடைசி பகுதிக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்கஇராயபுரம் எம்.எஸ். கோவில் தெருவில் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட இராயபுரம் எம்.எஸ். கோவில் தெருவில், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது. ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே.சங்கர்
மேலும் படிக்ககொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சுபகரகுடிநீர் வழங்கிய இராயபுரம, கிரேஸ் கார்டன் நண்பர்கள்….
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காத்திடும் வண்ணம் “சுபகரகுடிநீர்” இராயபுரம், கிரேஸ் கார்டனில் உள்ள சாய்பாபா திருக்கோயில் மற்றும் கிரேஸ் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக பகுதி வாழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்
மேலும் படிக்கசென்னை இராயபுரம் ஆம் ஆத்மி சார்பில், மக்களின் துயர் நீக்க காய்கறி விற்பனை!
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள் விலையேறிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் தேவையினை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, உடனடி நடவடிக்கையாக தங்களது சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து 06.04.2020 காலை 8 …
மேலும் படிக்கஇராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா!
இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 21.02.2020 முதல் 05.03.2020 வரை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி மயானக் கொள்ளையும் மற்றும் அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது. 11 ம் திருவிழாவாக (03.03.2020) செவ்வாய்க்கிழமையன்று வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” …
மேலும் படிக்க