பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துக்களை குறிப்பிட்டு கடந்த 17–ந்தேதி மற்றும் 20–ந்தேதி கட்டுரைகள் வெளியிட்டார். இந்த 2 கட்டுரைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சுப்ரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் 2 கிரிமினல் வழக்குகள் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த …
மேலும் படிக்கஎன்கவுண்டர்களுக்கு FIR கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
என்கவுண்டர் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டரை எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் உபகரணத்திலோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினரின் என்கவுண்டரை மாநில சிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும். அனைத்து என்கவுண்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். விசாரணை அறிக்கையும் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை காவலர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியதும் …
மேலும் படிக்கஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி: உயர் நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …
மேலும் படிக்கவருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …
மேலும் படிக்கஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா
கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை …
மேலும் படிக்ககந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?
பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …
மேலும் படிக்கநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றச்சாட்டு குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும், சிபிஐ இயக்குநர் பதவியில் …
மேலும் படிக்கஇத்தாலி கடற்படை வீரர் நேரில் 2 வாரங்கள் ஆஜராக விலக்கு : உச்ச நீதிமன்றம்
இந்திய கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் ஒருவர், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன் ஆஜராக தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்கவெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு …
மேலும் படிக்க