கத்தி படத்தின் போஸ்டர் ஆங்கில பத்திரிக்கையின் காப்பி என விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம், அதை தொடர்ந்து கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை எடுத்து, வேறு ஒரு இண்ஸ்ட்ரூமெண்டில் வாசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் ட்யூனை அச்சு பிசகமால் பயன்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
மேலும் படிக்க‘ஐ’-யை முந்திய ‘கத்தி’
அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …
மேலும் படிக்கநான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்
நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …
மேலும் படிக்ககத்தி டீசர்
கத்தி டீசர்
மேலும் படிக்கமேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!
அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், …
மேலும் படிக்கஅனபெல்லா – ஹாலிவுட் டிரைலர்
அனபெல்லா – ஹாலிவுட் டிரைலர்
மேலும் படிக்கஷங்கரின் “ஐ”, “The Fly(1986)”: காப்பியா?
சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த, சமீபத்தில் பிரமாண்டமாக (சொதப்பலாக) இசை வெளியீட்டு விழா நடந்த “ஐ” படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அக்கதையின்படி இந்தப் படம் “த ஃப்ளை” என்று 1986 ல் வெளிவந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து …
மேலும் படிக்கஐ டீசர்
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரமின் ஐ டீசர்
மேலும் படிக்கமுதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு
‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்டுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். சென்னை வந்திருக்கும் அர்னால்டு, ஏற்கனவே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி பிற்பகல் 2.45 மணியளவில் …
மேலும் படிக்கநடிகர் விஜய் க்கு எச்சரிக்கை
ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் கத்தி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 அமைப்புகள் ஒன்றாக இணைந்து கத்தி படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன. ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கு ராஜபக்சேவுடன் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி