Tag Archives: விபத்து

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்

இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது …

மேலும் படிக்க

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா?

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ஆவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனவேதான் …

மேலும் படிக்க

மாயமான அல்ஜீரிய விமானம் ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விபத்துக்குள்ளாகியது #AH5017

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின், வாகடூகு அருகிலுள்ள புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து அல்ஜீரியா தலைநகரின் ஹொவாரி விமான நிலையத்திற்கு செல்லும் ஏர் அல்ஜீரிய விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், 110 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில், …

மேலும் படிக்க

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி விபத்து: 20 மாணவர்கள் பலி

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற …

மேலும் படிக்க

பிஹாரில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி, 11 பேர் காயம்

தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் …

மேலும் படிக்க

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காட்சி

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

தென் கொரியாவில் ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து 450க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் திடீரென மூழ்கியது. அவசர உதவி கோரி கப்பலில் இருந்து வெளியான சமிக்ஞையை பார்த்து மீட்புக்குழுவினர் விரைந்தனர். அதற்குள் கப்பல் பாதியளவு மூழ்கிவிட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து – 300 பேரை காணவில்லை தேடும் பணி தீவிரம்

தென் கொரியக் கப்பல் முழ்கிய விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் சுமார் 300 பேரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். கப்பலில் சென்ற சுமார் 470 பேரில் இதுவரை 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும், தேடும் விளக்குகளைப் பயன்படுத்தி அவசரச் சேவைப் பணியாளர்கள் தேடினர். ஆனாலும், கடலில் சுழல் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள், கப்பலுக்குள் நுழைய முயன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இது வரை குறைந்தது …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய உண்மைகள் வேண்டும்: உறவினர்கள் வலியுறுத்தல்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனர்களின் உறவுக்காரர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். விமானத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று …

மேலும் படிக்க