மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 …
மேலும் படிக்கபொதுமக்களை அடிக்க கூடாது, மனம் புண்படும் படி பேசக்கூடாது – சென்னை கமிஷ்னர் அட்வைஸ்…
சென்னை போலீஸ் கமிஷனர் திரு. ஏ. கே. விஸ்வநாதன் அவர்கள் பம்பரமாக சுழன்று நகரில் காவல்துறையின் செயல்பாடுகளை கவனித்து வருகின்றார். அதன்படி, முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தவர், சென்னையில் கடந்த 19 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை 52,234 வாகனங்கள் பறிமுதல், ஊரடங்கு உத்தரவை மீறியதால் 60,131 பேர் மீது வழக்கு, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள், முக கவசம் அணியாதவர்கள் 24,704 பேர் மீது …
மேலும் படிக்கஇறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை மாநகராட்சி தடை விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் தாக்கல் …
மேலும் படிக்கஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …
மேலும் படிக்கசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு
தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க2ஜி விசாரணை, விலகியிருக்க சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவின் விவரம்: “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்பின் …
மேலும் படிக்கஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: உச்சநீதிமன்றம் கெடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் …
மேலும் படிக்ககருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் 627 பேர் கொண்ட பட்டியல் 2 சீலிடப்பட்ட உரைகளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி தாக்கல் செய்தார். கருப்புப் பணம் பதுக்கியோர் பெயர் …
மேலும் படிக்ககருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …
மேலும் படிக்க