Tag Archives: கால்பந்து

253 கோல்களுடன் லா லீகாவில் மெஸ்ஸி புதிய சாதனை

ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் லா லீகா (பிரதான லீக்) கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்கு பார்ஸிலோனா கிளப்பைச் சேர்ந்த ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸ்ஸி சொந்தக்காரராகியுள்ளார். செவில் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்டப் போட்டியில் லயனல் மெஸ்ஸி போட்ட 3 கோல்களின் உதவியுடன் பார்ஸிலோனா 5 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் லா லீகா கால்பந்தாட்டப் போட்டிகளில் தனது …

மேலும் படிக்க

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

கொல்கத்தாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பு கோலால் சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்தது. 8 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் …

மேலும் படிக்க

ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது

கூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின. கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது …

மேலும் படிக்க

நெதர்லாந்து வென்றால் விண்வெளிக்கு இலவச பயணம்: நெதர்லாந்து நிறுவனம் பரிசு

நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கோப்பையை தட்டி வந்தால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில் …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை பந்தாடியது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டம் தொடங்கிய  17வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். 26-வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார்  கோல் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: உலகச் சாம்பியன் ஸ்பெயின் படுதோல்வி

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது. ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி சால்வடோர் நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் போது அவ்வப்போது மழையும் பெய்தது. இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்ஃபோன்ஸோ பெனால்டி முறையில் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது. போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் …

மேலும் படிக்க

நேய்மர் பெனால்டி கிக் – அது கூடைப்பந்தாட்டத்தில்தான், குரேஷிய மேலாளர்

உலகக் கோப்பைக் கால்பந்து முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய பெனால்டி கிக் கொடுத்த ஜப்பானிய நடுவர் மீது குரேஷிய அணி மேலாளர் நிகோ கோவக் கடும் விமர்சனம் செய்தார் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் குரேஷிய வீரர் லவ்ரென், பிரேசில் வீரர் ஃபிரெட் என்பவரை முறை தவறித் தடுத்ததாக ஜப்பானிய நடுவர் நிஷிமோரா பிரேசில் சார்பாக பெனால்டி கிக் கொடுத்தார். நெய்மர் அதனை கோலாக மாற்றியது பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. நடுவரின் …

மேலும் படிக்க

கால்பந்து: நெய்மாரின் இரட்டை கோல்களால் முதல் ஆட்டத்தில் பிரேசில் வெற்றி!

சா பாலோ நகரில் உள்ள கொரிந்தியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரை பிரேசில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் இரண்டு கோல்கள் அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84,000 கோடி செலவழித்துள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

மேலும் படிக்க