என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( 07-07-2014 – திங்கட்கிழமை) தொடங்கியது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு என்ஜினியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள பி.இ. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் …
மேலும் படிக்கஜூலை 7 முதல் பொறியியல் பொது கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி தள்ளிவைக்கப்பட்டது. புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 10 கல்லூரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலந்தாய்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜூன் 27-ல் …
மேலும் படிக்கபொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கவிருந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான மனுக்கள் மீது முடிவெடுக்க அவகாசம் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த …
மேலும் படிக்கபி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு …
மேலும் படிக்கபி.இ கலந்தாய்வு: தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். www.annauniv.edu/tnea2014 என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை காணலாம்.
மேலும் படிக்க