ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. …
மேலும் படிக்கதமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா மாநில தலைவர் ” வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திருராமசுப்பிரமணி , IPS., ( துணைத் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கம், தலைவர், கைப்பந்து கழகம்), வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…
தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் பெருமைப்படும் வண்ணம் தன் இறுதி காலம் வரை தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் தான் திரு. டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்புச் …
மேலும் படிக்கநமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!
பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு வழிக்காட்டியாய் நம் பயணத்தினை நடத்திட வேண்டும் என்பதை நமக்கெல்லாம் தெளிவுற எடுத்துரைத்து மறைந்தும், நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாமனிதர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தை நிறுவி, பத்திரிகையாளர் வாழ்வும் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதில் துணிச்சலாக தன் எண்ணங்களை பகிர்ந்தே வாழ்ந்து காட்டிய “பத்திரிகை போராளி” ஐயா திரு. …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர் என தன் வாழ்நாள் இறுதி வரை பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவரும், எளிமையான மனிதராக நம் நினைவுகளில் மறையாமல் வாழ்ந்து வரும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீனியஸ் ரிப்போட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் சார்பாக சென்னை ராயபுரத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. …
மேலும் படிக்ககொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற சந்தேகம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …
மேலும் படிக்க“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் படிக்கஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்
14 – 02 – 2019 ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆளுநர் மாளிகைப் புகழ் பேராசிரியை நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர் விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார். இந்த தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. …
மேலும் படிக்கடியூஜே நடத்திய குடியரசு தின விழா மற்றும் மகளிருக்கான மருத்துவ முகாம்.
டியூஜே நடத்திய குடியரசு தின விழா, மகளிருக்கான மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா இன்று 26-1-19 காலை 10 மணியளவில் மாநில தலைவர் திரு. D S R சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்ளாக திரைப்பட இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன், டாக்டர். சி.எம்.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமினை துவக்கி வைத்த இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் நமது ஜீனியஸ் …
மேலும் படிக்கதிருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்
ஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை நண்பர்களே வணக்கம், நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் …
மேலும் படிக்க