உலகம்

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்

இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது …

மேலும் படிக்க

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

அதிபர் ஒபாமா அரசின் அதிருப்தி எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒபாமா இந்த ராஜினாமாவை உறுதி செய்துள்ளார். புதிய அமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரமகா நடைப்பெற்று வருகிறது.  அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் நேற்று திடீரென தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நிர்ப்பந்தம் காரணமாக அவர் பதவி விலகியதாக தெரிகிறது. ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு உலக …

மேலும் படிக்க

குயின்ஸ்லாந்து பல்கலையில் பிரதமர் நரேந்திர மோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துச் சென்றார். பிரிஸ்பேன் விமான நிலையத்தை அடைந்த மோடி, ஒரு சில மணி நேரங்களில் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்தும், அவற்றின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார் மோடி. தேவையற்ற கழிவுகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும், …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து: இலங்கை

போதை பொருள் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதாக கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மரண தண்டனை விவகாரம்: ராஜபக்சேவுடன் பேசினாரா மோடி?

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சேவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது. இலங்கைக்கு போதைப்பொருள் …

மேலும் படிக்க

நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

நைஜீரியாவில் ஒரு பள்ளியில் நேற்று தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில் இது போன்ற வன்முறை தாக்குதல்கள் கோழைத்தனமான செயல், பலியோனோர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்கொலை …

மேலும் படிக்க

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம்

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நம்பகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணைக்க ஒத்துழைப்பு தரும் தனிநபர்களையும் அந்நாட்டு …

மேலும் படிக்க

இலங்கையில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமானதுதான்: சீனா விளக்கம்

இலங்கைத் துறைமுகத்தில் சீன நாட்டுக் கடற்படையின் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நிகழ்வுதான் என சீனா விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சீனப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர், அந்நாட்டின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: பாரசீக …

மேலும் படிக்க

கௌரவ மரணத்தால் புற்றுநோய் அரக்கனை கொன்ற பெண்

அமெரிக்காவில் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பெண், நோயால் உயிரிழப்பதை தவிர்த்து, நோயைக் கொல்லும் விதத்தில் கௌரவமான மரணத்தைத் தழுவியுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்டானி மேனார்ட் என்ற 29 வயது பெண் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் உதவாத நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இன்னும் 6 மாத காலமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், …

மேலும் படிக்க

ஜெருசலேம் அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து , வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான போலீஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனர் ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக்கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை …

மேலும் படிக்க