காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம், மிரட்டல் கடிதம்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

[pullquote]பாஜக ஆட்சிக்கு   வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.[/pullquote]

கடந்த சில தினங்களுக்கு முன்னர்,   காவல் நிலையங்களுக்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தால்   சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்   நிலையில் உள்ளன. இதில் சென்னையில் உள்ள காவல்   நிலையங்களில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக, புகார்   கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது.   புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை   வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர். மேலும்,   அவர்களுடன் வரும் நபர்களிடமும் முகவரி எழுதி வாங்கப்படுகிறது.

வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ராயப்பேட்டையில் இருந்து   அனுப்பப்பட்டது என்பதால் ராயப்பேட்டை காவல் நிலையத்தில்   போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மிரட்டல் கடிதம் வந்தது பற்றி போலீசார் வெளிப்படையாக கருத்து   சொல்ல மறுத்து விட்டனர்.

அந்த கடிதத்தில், பாஜ கட்சி ஆட்சிக்கு   வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று   குறிப்பிடப்பட்டதுடன் சென்னையில் உள்ள சில காவல் நிலையங்கள்   பற்றியும் எழுதப்பட்டிருந்தது. காவல் நிலையங்களில் புகார் கொடுக்க   சென்றால் பணம் கொடுத்தால்தான் உடனடி விசாரணை நடக்கிறது.
[pullquote]லஞ்சம் வாங்கும் போலீஸ்   நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால்தான் விமோசனம்   கிடைக்கும்[/pullquote]

இல்லாவிட்டால் புகாரை வாங்கி வைத்து கொண்டு விசாரிக்கிறேன்   போ என அனுப்பி விடுகின்றனர். முதல் தகவல் அறிக்கை (FIR)   உடனே போடுவது இல்லை. இதுமட்டுமல்ல புகார் கொடுப்பவர்கள்   மீதே கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூல் செய்து வழக்கை   ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றனர். பணத்துக்காக மட்டுமே   போலீசார் வேலை செய்கின்றனர். எனவே லஞ்சம் வாங்கும் போலீஸ்   நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால்தான் விமோசனம்   கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையங்களுக்கு வெடி   குண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவலர்களை மட்டும் அல்ல   போலீஸ் அதிகாரிகளுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மிரட்டல் கடிதம் எழுதியது யார் என்றும் ரகசிய விசாரணை   தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.