சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமின் மனு தள்ளுபடி

வட இந்திய மாநிலமான ஹரியானாவில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் இன்று வியாழனன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

ஒரு கொலை வழக்கில் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

ஹரியாணாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ராம்பாலின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயபால் மற்றும் நீதிபதி தர்ஷன் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

சாமியார் ராம்பால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹரியானாவின் ஹிசார் பகுதி காவல்துறை அதிகாரியும், ஹரியானா அரசு வழக்கறிஞரும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று சாமியாரைக் கைது செய்ய அந்த சாமியாரின் ஆசிரம வளாகத்துள் அதிரடியாக நுழைந்த காவல் துறையினர், ஒரு குழந்தை மற்றும் 4 பெண்களின் சடலங்களை கண்டெடுத்தனர். அங்கு உள்ளே இருந்த இன்னுமொரு பெண் மருத்துவமனையில் இறந்துப்போனார். இந்த அனைத்து மரணங்களுக்குமான காரணம் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

ராம்பால் ஆசிரமத்தின் தற்போதைய தோற்றம்
ராம்பால் ஆசிரமத்தின் தற்போதைய தோற்றம்

ஆயுதந்தாங்கிய சாமியாயின் பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆசிரமத்தில் காவல் துறையினர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறையில் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதல்களின் முடிவில் ஆசிரமத்தின் உள்ளேயிருந்து சுமார் 10,000க்கும் அதிகமான மக்கள் தப்பி வெளியேறியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர், சாமியார் ராம்பால் மஹாராஜ் தங்களை தனக்கான மனிதக் கேடயமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

Check Also

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *