திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி …
மேலும் படிக்கமக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.
நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …
மேலும் படிக்கப்ளீஸ் – பாடாதே சிம்பு நிறுத்திடு – சௌந்தர்யா ரஜினிகாந்த்
விஜய் டி.வியின் ‘காபி வித் டி.டி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என செளந்தர்யாவிடம் கேட்டபோது, ‘சிம்பு, நீ பாடறதை நிறுத்திடேன்,” என்றார். அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் அவருக்கு எதிரான கமெண்டுகளை பதிவு செய்தனர். இச்செயல் குறித்து …
மேலும் படிக்கஅனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …
மேலும் படிக்கசென்னையில் விடிய விடிய மழை – மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவும் முழுவதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்கபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 9 ஆவது முறையாக வென்று நடால் சாதனை
ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நடால், செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார். ஒன்பது முறை இப்போட்டியை வென்றது மட்டுமன்றி, அதை தொடர்ச்சியாக ஐந்து முறையும் வென்று ரஃபேல் நடால் புதியதோர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆறு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் …
மேலும் படிக்கமுழு உற்பத்தித் திறனான1000 மெகா வாட்டை எட்டியது கூடங்குளம் முதல் அணுஉலை
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. சரியாக பிற்பகல் 1.20 மணிக்கு அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: “கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக …
மேலும் படிக்கமின்வெட்டு பிரச்சனையில், தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது – டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், “முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, “நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்” என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், …
மேலும் படிக்கஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு நிபந்தனை, ஒரு மாதம் கெடு ஜி7 நாடுகள் கடும் எச்சரிக்கை
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால், அந்நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் ஜி8 என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தன. இந்த அமைப்பின் மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறவிருந்தது. ஆனால், உக்ரைன் நாட்டில் பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால் …
மேலும் படிக்கஉணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்
மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட் பேங்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தையான ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இந்த புதிய ரோபோவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி