அமுரா

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற …

மேலும் படிக்க

நில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ள நிலையில், அதனை ஆதரித்து வாக்களித்த தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்வாங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிப்புக்கு …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க

இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு கருணாநிதி கண்டனம்

இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்து வருவதாக கூறியுள்ளார். அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை …

மேலும் படிக்க

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார்: ராம்ஜெத்மலானி வருத்தம்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 78வது நாளாக நீடிக்கிறது. ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர …

மேலும் படிக்க

மூத்த கன்னட எழுத்தாளர், முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 16 புதிய தாலுகாக்கள் மற்றும் 4 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில் நடப்பு ஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தாலுகாக்கள் மர்றும் 4 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், “நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் பென்னாத்தூரில் புதிய …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை

மெட்ரோ ரயில்களில் கூடுதல் பயணிகளை ஈர்க்க 3 வகையான கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பிறகு வார நாட்களில் …

மேலும் படிக்க

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் (30). இவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்தாருடன் காரில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா …

மேலும் படிக்க

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு

பிரேசிலில் 2016 ம் ஆண்டு நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. லண்டனில் நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் போட்டியில், ஸ்பெயின் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 1980 ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் அணி ஒலிம்பி போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பின்னர், …

மேலும் படிக்க