மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …
மேலும் படிக்கதென் கொரியா – வட கொரியா போர் மூலும் சூழல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கொரிய நாடுகளின் எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தென் கொரியா தனது எல்லையில் ஒலிபெருக்கிகளை வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதற்கு வட கொரியா காலக்கெடு விதித்திருந்தது. அந்தக் காலக்கெடு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கின்றன. தென்கொரிய அரசு, காலக்கெடுவுக்குள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் …
மேலும் படிக்கநம்ம சென்னைக்கு இன்று 376 வது பிறந்த நாள்!
எழில்மிகு நகரமான நமது சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமைதிப் பூங்காவான சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர். 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா …
மேலும் படிக்கவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி …
மேலும் படிக்கசன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவின் படி தங்களுக்கு எதிராக வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதை முன் கூட்டியே தவிர்க்கும் வகையில் மாறன் சகோதரர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், …
மேலும் படிக்கநடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.
மேலும் படிக்கநடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி
சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …
மேலும் படிக்கதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கஇயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு
இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும். இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும். இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த …
மேலும் படிக்கலலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்
லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. …
மேலும் படிக்க