அமுரா

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனை விவகாரம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்கிறார்

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார். ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசியதாவது, ”பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை

அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …

மேலும் படிக்க

ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தன்னை மதிப்பதில்லை என்ற வருத்தத்தினால் அவர் ராஜினாமா செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, ஞானதேசிகனுக்கும், முகுல் வாஸ்னிக்கிற்கும் இடையே புதனன்று டெல்லியில் நடைபெற்ற …

மேலும் படிக்க

ஜெருசலேம் அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து , வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான போலீஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனர் ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக்கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை …

மேலும் படிக்க

மியான்மார்: அதிபர்- இராணுவம்- ஆங் சான் சூய் முக்கியப் பேச்சு

மியன்மாரின் முக்கிய இராணுவ பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூய் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் அழைத்து அதிபர் தெயின் செயின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மாரின் மூத்த இராணுவ ஜெனரல் இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில், இந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மியன்மாரில் அடுத்த ஆண்டுபொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக மியன்மாரின் சர்ச்சைக்குரிய …

மேலும் படிக்க

ஹைதராபாத் மருத்துவர்கள் கருவில் இருந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்ட இதய பாதிப்பினை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிரிஷா என்ற பெண்ணின் கருவில் இருந்த குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. கருவில் இருந்த குழந்தைக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அந்த குழந்தை பிறந்த பிறகு அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டனர். எனவே, கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு அறுவை …

மேலும் படிக்க

ஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனையா? கருணாநிதி கண்டன அறிக்கை

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக …

மேலும் படிக்க

கலைஞர் டிவிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் : குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம் உட்பட 19 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. கலைஞர் டிவி உட்பட 9 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய …

மேலும் படிக்க

10 மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை: டிசம்பர் 10    புதன்கிழமை – தமிழ் முதல் தாள் டிசம்பர் …

மேலும் படிக்க

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை

தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் …

மேலும் படிக்க