அமுரா

மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …

மேலும் படிக்க

பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை வெளிப்படையாகக் காட்டியது. பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில் சீனா, தன்னுடைய ராணுவ ஆற்றலை உலகுக்கு உணர்த்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சியை  நடத்தியது. …

மேலும் படிக்க

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …

மேலும் படிக்க

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …

மேலும் படிக்க

பாயும் புலி படம் நாளை வெளியாகிறது

பாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரும்அறிவித்துள்ளார்கள். விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் …

மேலும் படிக்க

அரிசி குடோனாக மாறும் ராஜபக்சே கட்டிய விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரில் கட்டிய விமான நிலையம், தற்போதைய அரசால் அரிசி குடோனாக மாற்றப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தல என்ற இடத்தில் ராஜபக்சே விமான நிலையத்தைக் கட்டி திறந்தும் வைத்தார். அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தற்போது ஒரே ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தை மூடிவிட்டு அரிசி குடோனாக மாற்றும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று …

மேலும் படிக்க

இந்தியாவில் 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகள்

கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையை ஏற்று, இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நோட்டுகளில் 7 புதிய அம்சங்கள் இடம்பெறும் என்றும், முதற்கட்டமாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் …

மேலும் படிக்க

ஆந்திராவில் வெங்காய லாரி கடத்தல்

ஆந்திராவின் ராவலுபடு பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ராவலுபடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சாலையோரம் தூங்கியுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்காயத்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓட்டுநர் லாரி இல்லாததைக் கண்டு …

மேலும் படிக்க

ஐஐடி யில் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேர ஜேம்-2016 நுழைவுத்தேர்வு

இந்திய அறிவியல் நிறுவனத்தில்(ஐஐஎஸ்சி) வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர ஜேம் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த “ஜேம்’ தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு …

மேலும் படிக்க