வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி …
மேலும் படிக்கசன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவின் படி தங்களுக்கு எதிராக வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதை முன் கூட்டியே தவிர்க்கும் வகையில் மாறன் சகோதரர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், …
மேலும் படிக்கநடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.
மேலும் படிக்கநடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி
சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …
மேலும் படிக்கதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கஇயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு
இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும். இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும். இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த …
மேலும் படிக்கலலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்
லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. …
மேலும் படிக்கசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு
தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்கபிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
பிரதமர் மோடியை டெல்லியில் இன்று அதிமுக எம்.பிக்கள் 48 பேர் நேரில் சந்தித்து என்.எல்.சி தொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர். ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி கடந்த மாதம் 20ந்தேதி முதல் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் …
மேலும் படிக்கஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?
புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி