லிங்கா டீசர்
மேலும் படிக்ககாங்கிரஸில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசனை நீக்கி அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தகவலை டில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் புதிய கட்சியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே. வாசன் திங்கள்கிழமை பேட்டியளித்துள்ளார். அப்போது …
மேலும் படிக்கஇலங்கையில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமானதுதான்: சீனா விளக்கம்
இலங்கைத் துறைமுகத்தில் சீன நாட்டுக் கடற்படையின் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நிகழ்வுதான் என சீனா விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சீனப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர், அந்நாட்டின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: பாரசீக …
மேலும் படிக்கதமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம்
தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) அசோக் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும் கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்: தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கே.ராமானுஜம் செவ்வாய்க்கிழமை(நவ.4) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு …
மேலும் படிக்ககௌரவ மரணத்தால் புற்றுநோய் அரக்கனை கொன்ற பெண்
அமெரிக்காவில் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பெண், நோயால் உயிரிழப்பதை தவிர்த்து, நோயைக் கொல்லும் விதத்தில் கௌரவமான மரணத்தைத் தழுவியுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்டானி மேனார்ட் என்ற 29 வயது பெண் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் உதவாத நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இன்னும் 6 மாத காலமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், …
மேலும் படிக்க“ஐ” திரைப்படம்: தயாரிப்பு பிண்ணனி – வீடியோ இணைப்பு
“ஐ” திரைப்படம் தயாரிப்பு பிண்ணனி
மேலும் படிக்கதேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர …
மேலும் படிக்கதமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனை விவகாரம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்கிறார்
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார். ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசியதாவது, ”பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் …
மேலும் படிக்கஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை
அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …
மேலும் படிக்கஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தன்னை மதிப்பதில்லை என்ற வருத்தத்தினால் அவர் ராஜினாமா செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, ஞானதேசிகனுக்கும், முகுல் வாஸ்னிக்கிற்கும் இடையே புதனன்று டெல்லியில் நடைபெற்ற …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி