கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டா பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி ஸ்ரீநகர் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் வந்தடைகின்றனர். …
மேலும் படிக்கஅரசு மருத்துவமனையில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவ பிரிவு சார்பில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கௌரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா, பொது மருத்துவத்துறை தலைவர் அபிராமி, முதியோர் நல மருத்துவர் பிஜின் ஆலிவர் ஜான், ஆகியோர் …
மேலும் படிக்கதாசில்தார்கள் மாற்றம் ஆட்சியர் உத்தரவு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த ரமேஷ் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சரண்யா தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராகவும் ( தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்), அங்கு பணியாற்றி வந்த பாலமுருகன் கலெக்டர் அலுவலக மேலாளராகவும் ( பொது) இடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் குடியாத்தத்தில் தலைமை எடுத்து துணை …
மேலும் படிக்கநாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது.
சிங்கள தீவிற்கு ஒரு பாலமாய்… 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் கப்பல் புறப்பட்டது. 150 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்ய முடியும், ரூ.7,670 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் …
மேலும் படிக்ககாசா முழுமையும் முற்றுகை – எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து
“காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் – மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது” “அனைத்து பணயக் கைதிகளையும் உடனே வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ். ஐ. நா. வில் ரஷ்யா, பணய க் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது. போர் உச்சத்தில் இருப்பதால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் ரஷ்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க24 மணி நேரத்துக்குள் 11 லட்சம் மக்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும்.இஸ்ரேல் உத்தரவால் பதற்றம்
ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 7வது நாளை எட்டி உள்ளது. காசா நகரில் வசிக்கும் 11 லட்சம் பேர் 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன நாட்டில் உள்ள காசா பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 7ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தி …
மேலும் படிக்கதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு
மேலும் படிக்கசென்னையில் மகளிர் உரிமை மாநாடு! சோனியா, பிரியங்கா வருகை…
பிரம்மாண்டமாய் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டுக்கு வருகைத் தந்த சோனியாகாந்தி, பிரியாங்கா காந்தி ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.
மேலும் படிக்கபட்டினி குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்?
உலகளவில் பட்டினி குறியீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு 107 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 28.7 சதவீதம் பெற்று 111 வது இடத்தில் பின்தங்கிவிட்டது. இந்திய மக்கள் பட்டினியால் எந்த அளவுக்கு அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. இந் நிலையில் , உலக பட்டினி குறியீட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102 வது இடத்திலும், வங்காள தேசம் 81 வது இடத்திலும், நேபாளம் 69 வது இடத்திலும் , இலங்கை …
மேலும் படிக்கவிரிவடையும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ” காலை உணவு திட்டம் ” முதற்கட்டமாக 1,545 , நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கி , அதில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பலன் பெற்றனர். தற்போது இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் 15, 750 மாணவ, மாணவியர் ” காலை உணவு திட்டத்தில்” பயன் பெறும் வகையில் விரிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி