ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடெங்கிலும் ஒன்பதரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், ‘சிசாட்’ என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிதாகவும் மற்ற மொழி மாணவர்களுக்கு …
மேலும் படிக்கசிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என மத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு சுமார் 3 இடங்களில் ஒவ்வொரு இஞ்ச் அளவிலும் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் …
மேலும் படிக்கநம்ம சென்னைக்கு இன்று 376 வது பிறந்த நாள்!
எழில்மிகு நகரமான நமது சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமைதிப் பூங்காவான சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர். 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா …
மேலும் படிக்கவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி …
மேலும் படிக்கநடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.
மேலும் படிக்கசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு
தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்கபிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
பிரதமர் மோடியை டெல்லியில் இன்று அதிமுக எம்.பிக்கள் 48 பேர் நேரில் சந்தித்து என்.எல்.சி தொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர். ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி கடந்த மாதம் 20ந்தேதி முதல் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் …
மேலும் படிக்க‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த …
மேலும் படிக்ககொச்சியில் உலகின் முதலாவது சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் திறப்பு
உலகிலேயே சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் செயல்படும் விமான நிலையத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று திறந்து வைத்தார். கொச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார …
மேலும் படிக்கமங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)
மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை …
மேலும் படிக்க