செய்திகள்

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். திருமாவளவன் என்னிடம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இழந்ததால்தான் இந்த புகாரை முதல்வரின் தனிப் பிரிவில் …

மேலும் படிக்க

குஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டத்தில் வன்முறை: பலி 9 ஆக அதிகரிப்பு

இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 …

மேலும் படிக்க

என்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ்: தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 39 நாட்களாக என்எல்சி தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தி 24% ஊதிய உயர்வு வழங்க …

மேலும் படிக்க

முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் குறைந்திருக்கிறது

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் …

மேலும் படிக்க

பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார். நாமினி! “முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். …

மேலும் படிக்க

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …

மேலும் படிக்க

இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை …

மேலும் படிக்க

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், “விசையுறும் பயதினைப் போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்” என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய …

மேலும் படிக்க