செய்திகள்

மறுபடியுமா! நடிகை அஞ்சலி மாயம்?

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.  இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி …

மேலும் படிக்க

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது? தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்?

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது, தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் …

மேலும் படிக்க

விமானத்தை கடத்தியிருக்கலாம்? மலேசியன் பிரதமர் ரஸாக்

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு சென்றபோது மலேசியா- வியட்நாம் பகுதியில்  காணாமல் போனது. இந்த விமானம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் …

மேலும் படிக்க

ட்வெண்டி 20 உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், அகான் கலைநிகழ்ச்சி

வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் ட்வெண்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில்      ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் அகானும் (Akon) கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் …

மேலும் படிக்க

மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு சிறை: கேஜ்ரிவால் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் …

மேலும் படிக்க

காப்பி அடிக்கவில்லை: கமல்

பிரெஞ்சு போட்டோகிராபரின் படத்தை பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த படம் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் விமர்சனம் வெளியானது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியது, தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த …

மேலும் படிக்க

ஆயிரத்தில் ஒருவன் சினிமா குறித்த அரசியல் சர்ச்சை

1965 இல் வெளியாகிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்,  ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ”மாதிரி நன்னடத்தை விதி மீறல்” …

மேலும் படிக்க

வேட்பாளரே இல்லாமல் தேர்தல் பிரச்சாரம்: விஜயகாந்த்

பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இன்று மாலை திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். நேற்று பாஜக தனது கூட்டணி விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருவதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படாமல் போனதால் ராஜ்நாத் சிங்கின் சென்னைப் பயணம் ரத்தானது. …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் ஞாநி ஆம் ஆத்மி’யில் இணைகிறார் : சென்னையில் போட்டி?

மூத்த செய்தியாலரும் அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி , தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ‘தீவிர …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன  பின்பும் கிட்டதட்ட நான்கு மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த சனிக்கிழமை மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு சென்ற விமானம் மாயமானது. அதில் பெரும்பாலான பயணிகள் சீனர்கள். அந்த விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை அறிய அவர்களின் குடும்பத்தார் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விமானம் …

மேலும் படிக்க